Mubtada and habar مُبْتَدا خَبَرْ tamil

 مُبْتَدا خَبَرْ எழுவாய், பயனிலை Subject ,predicate 

 

எழுவாய் , பயனிலை யின் சட்டங்கள் 
1 "அதுவாகிறது","இதுவாகிறது" என்றும் "அவனாகிறவன்","இவனாகிறவன்" என்ற அர்த்தம் வரக்கூடிய பெயர்ச்சொல் (இஸ்ம்) مُبْتَدا எனப்படும்.
உதாரணம்: மாணவனாகிறவன் உட்காரக் கூடியவனாக இருக்கிறான்.
இதில் மாணவனாகிறவன் مُبْتَدا எனப்படும் ஏனெனில் "அவனாகிறான்" என்று வரக்கூடிய காரணத்தினால்.

2 இரண்டு பெயர்ச்சொற்களை கொண்ட ஒரு பெயர்ச்சொல் வாக்கியத்தில் முதலாவது பெயர்ச்சொல்  مُبْتَدا என்றும் இரண்டாவது பெயர்ச்சொல் خَبَرْ என்றும் அழைக்கப் படும். 

3 முதலாவது பெயர்ச்சொல்مُبْتَدا ஒரு மனிதனை குறித்தால் இரண்டாவது பெயர்ச்சொல்லான 
خَبَرْ ஆனது அந்த மனிதனைப் பற்றிய செய்தியை அறிவிக்கும். 
مُبْتَدا  வில் "அல்" வரலாம் ஆனால் خَبَرْ ல் "அல்" வரலாகாது.

5 مُبْتَدا வும் خَبَرْ ரும் பொருந்திப்போக வேண்டும்.
 مُبْتَدا ஆண்பாலாக  இருந்தால் خَبَرْ ம்  ஆண்பாலாகவே  வரவேண்டும்.   مُبْتَدا பெண்பாலாக இருந்தால் خَبَرْ ம் பெண்பாலாகவே வரவேண்டும். 

உதாரணம்:  المَرْءَةُ جَالِسَةٌ அந்த ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள்.

ஒருமை என்றாலும் இருமை என்றாலும் பன்மை என்றாலும் இரண்டும் பொருந்திப்போக வேண்டும். 

உதாரணம்:  الرِّجَالُ جالِسُوْنَ அந்த பல ஆண்கள் அமர்ந்திருக்கிறார்கள்.

جَرْ செய்யக்கூடிய எழுத்துக்கள் 19 உள்ளன.بِ,عَلَي,لِ,فَي போன்ற இடைச்சொற்கள் பெயர்ச்சொல்லில்     (இஸ்மில்)நுழைந்தால் அதன் கடைசி எழுத்திற்கு "கஸ்ரா" செய்யும்.
  
உதாரணம்: تِلْمِيذٌ (மாணவன்) என்பது" لِ" என்ற இடைச்சொல் இணைந்தால் لِتِلْمِيْذِ என்று அதன் கடைசி எழுத்திற்கு கஸ்ரா செய்துவிடும்.

7 இஸ்முக்கு جَرْ ஜர் செய்வதால் அதற்க்கு பெயர் مَجْرُوْر எனப்படும். 

ஜார் க்கு பிறகு  مُبْتَدا வந்தால் அதற்க்கு "அல்" வரத் தேவையில்லை.
 مُبْتَد இல்லாமல் خَبَرْ வராது. சில சமயங்களில் ஜார் மஜரூரில் ஒளிந்திருக்கும்.
10 இரண்டு பெயர்ச்சொற்களை கொண்ட ஒரு வாக்கியத்தில் முதலாவது பெயர்ச்சொல்  مُبْتَدا என்றும் இரண்டாவது பெயர்ச்சொல் خَبَرْ என்றும் அழைக்கப் படும்.
குர் ஆனில் சில உதாரணங்கள்:

وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 2:218 

وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَؕ 2:132

قَالَ اَنَا يُوْسُفُ 12:90

 قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ۚ‏112:1 

مُبْتَدا சிவப்பு நிறத்திலும் خَبَرْ பச்சை நிறத்திலும் கொடுக்கப் பட்டுள்ளது.

பயிற்சி 
المدرِّسُ جالِسٌ
மேற்கண்டவற்றில்  مُبْتَدا  வையும்  خَبَرْ யும் கண்டறியவும்.
2 "கதவாகிறது திறக்கப் பட்டதாக இருக்கிறது".இதை அரபியில் மாற்றி مُبْتَدا ,خَبَرْ ஐ கண்டறியவும்.
 
குறிப்பு:

  அல்லாஹ்வின் உதவியால் ரபீக் ஹஜ்ரத் மற்றும் ஷேக் திஜானி மற்றும்  அவர்களின் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பட்டுள்ளது.

   







Post a Comment

0 Comments